ஒரு பொம்பள நானே! - 47

இருவரும் எங்கள் அருகில் வந்தார்கள்.

என் பார்வை டக்கென வேலுவின் பேன்ட் ஜிப் பகுதியின் பக்கம் போய் திரும்பியது. 
கனகா, ரகுவை பார்த்து விட்டு... "இவன் ஏன் கூட வரான்?"

"இவன் என் பிரண்ட் தான். இவனும் வரட்டும் ஒரு சப்போர்ட்டுக்கு ..."

"அப்போ நீ இவங்கிட்ட சொல்லிருக்கியா?, நம்மள பத்தி.."

கனகா இப்படி கேட்டதும் ரகு திடுக்கிட்டான்.

"இல்ல இல்ல... இவன் சும்மா தான் வரான். இவனும் வரட்டும் கொஞ்சம் தைரியமா இருக்கும்."

"அப்படின்னா நானும் என் பிரண்ட்ஸ் கூட்டிட்டு வரேன்"

ரகுவுக்கு வேறு வழி இல்லை, "சரி" என்றான்.

ஐந்து பேரும் நடந்து கோவிலை அடைந்தோம்.. ஆள் அரவமில்லாமல் இருந்தது.

வரும் வழியில் நான் எவ்வளவு அடக்கினாலும், என்னையும் மீறி என் பார்வை வேலுவின் பேன்ட் ஜிப்பை நோக்கியே சென்றது.

அத கவனித்த மே, என் கையில் பலமாக கிள்ளினாள்.

டக்கென நான் சுதாரித்துக் கொண்டேன்.

பின்பு சுற்றும் முற்றும் பார்த்து வள்ளியை காணோமே, என பயந்தேன்.

கனகாவும் கைய பிசைந்தாள்.

"எங்க அவங்க?, ஏதோ ஒரு அக்கா பேசனும்னு சொன்னியே.... யாரு அவங்க..?"

முதல் முறையாக வேலு கனகாவை பார்த்து கேட்டான்.

"இங்க தான் இருக்கறேன்னு சொன்னாங்க.."

"காணோம்?"

"தெரியல.."

சுற்றும் முற்றும் பார்த்தோம்.

திடீரென "என்ன இத்தன பேர் வந்திருக்கீங்க?" என கோவிலுக்குள் இருந்து கேட்டவாறே வள்ளி அக்கா வெளியில் வந்தாள்.

அப்போது தான் எனக்கு உயிரே வந்தது. ஓடிப்போய் கட்டிப்பிடித்துக்கொள்ளலாம் என தோன்றியது. ஆனால் அடக்கிக் கொண்டேன்.

வேலு கொஞ்சம் விரைப்பாக முன்னாடி வந்து,

"என்ன பேசனும்?"

"எதுக்கு வர சொன்னீங்க?"

"என்ன வேணும் உங்களுக்கு?"

"யார் நீங்க?"

என அடுக்கடுக்காக கேள்வி கேட்டான்.

வள்ளி அக்கா எகத்தாளமாக "ஏன் அவன் பேச மாட்டானா? அவனுக்கு பதிலா எல்லாத்தையும் நீ தான் பண்ணுவியா?" என ரகுவை பார்த்தவாறே வேலுவிடம் கேட்டாள்.

ரகு அமைதியாக நின்றான்.

எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் நடுங்கினாலும், மேவின் கையோடு கை கேர்த்துக் கொண்டு வள்ளி அக்கா இருக்கும் தைரியத்தில் நின்றேன். அதே சமயம் யார் ரகு? என சொல்லாமலே வள்ளி அக்கா சரியாக கண்டுபிடித்துவிட்டாளே என ஆச்சர்யமாகவும் இருந்தது.

வேலுவே தொடர்ந்து,

"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு இப்போ?"

"என்ன வேணும் உங்களுக்கு?"

"என்ன மெரட்றீங்களா?"

என குரலை உயர்த்தினான்.

சட்டென வள்ளி யாரும் எதிர்பார்க்காதவாறு வேலுவை ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.வேலு கொஞ்ச தூரம் தள்ளிப்போய் ரகுவின் சைக்கிள் மீது தடுமாறி விழுந்தான்.



தொடரும்....

Comments